செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆடு போவும் ஆடு போவும் வழிதனிலே

More than a Blog Aggregator


ஆடு போவும் ஆடு போவும் வழிதனிலே
அரசங்கொத்த அரசங்கொத்த வெட்டி வச்சேன்
வரடியோட வரடியோட அரசுன்னு
வந்த ஆடு வந்த ஆடு தீண்டுலத்த

மாடு போவும் மாடு போவும் வழிதனிலே
மாட்டு தொட்டி மாட்டுதொட்டி கட்டி வச்சேன்
மலடியோட மலடியோட தொட்டியின்னு
வந்த மாடு வந்த மாடு தீண்டுலத்த

நான் மொளவ நல்ல நிறுத்தி வச்சேன் கண்ணகி
நான் மொச பூச செய்துவச்சேன் இப்பவும்
அப்படியும் புள்ள இல்ல கண்ணகி- இந்த
அதிசய ராசா பாணியர்க்கு இப்பவும்

நான் கடுவ நல்ல நிறுத்திவச்சேன் கண்ணகி
நான் கன பூச செய்து வச்சேன் இப்பவும்
அப்படியும் புள்ள இல்ல கண்ணகி- இந்த
அதிசய ராசா பாணியர்க்கு இப்பவும்

குறிப்பு: குழந்தைப் பேறு இல்லாப்பெண்கள் தங்களின் சோகத்தை ஒப்பாரியாகப் பாடும் பாடல்.
பாடியவர்: திருமதி காவேரி , மருங்கூர்


கருத்துகள் இல்லை: