புதன், 25 மார்ச், 2009

சிறுவர் பாடல்கள்

மழ வருது மழ
வருதுநெல்லு அள்ளுங்க
முக்காப்படிஅரிசி போட்டுமுருக்கு சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்குசூடு வய்யுங்க.

அத்தி பழம் விக்குதடி
தனக்கோடிஅண்ணங்கிட்ட சொல்லாதடி சின்னபாப்பா ஒன்னையும் என்னையும் வளத்தாங்கரோட்டுல
ஏண கட்டி போட்டாங்ககம்மங்கருது போல வளத்தாங்க-இந்தகமினேட்டி பயலுகிட்ட குடுத்தாங்கசோளப் பயிரு போல வளத்தாங்க-இந்தசோம்பேரி பயலுகிட்ட குடுத்தாங்க.

எண்ணெ இல்ல சீப்பில்லஊதாப்
பொடவ இல்லஉன்னக் கூட நா வல்ல

வடக்க குடுக்காதீங்கவாடிம்பான்
போடிம்பான்வல்லார ஓழிம்பான்என்ன
யாருக்கும் குடுக்காதீங்கஎன்ன பெத்த
அப்பாவுக்கே குடுத்துடுங்க.

3 கருத்துகள்:

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

அட

இது எங்கம்மா எனக்கு சொல்லித்தந்ததுங்க

இங்க பார்த்தவுடனே ஆச்சரியா இருக்கு.

இது மாதிரி நெறையப் பதிவிடுங்க.

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

எங்கம்மாவோட ஊரு செஞ்சி பக்கம், அதனால எனக்கு இது மாதிரி அவங்க நெறைய சொல்லிக்கொடுத்திருக்காங்க சின்ன வயசுல, இப்ப எங்க, எல்லாம் மறந்திடுச்சி,

மறுபடியும் இங்க பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்.

இது போன்ற நாட்டுப்பாடல்களை பதியுங்கள்.

rathinapugazhendi சொன்னது…

நன்றி அமுதவர்சினி அம்மா தினமும் ஒரு பாடல் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன் படித்து உங்கள் மலரும் நினைவுகளைத் தொடருங்கள்.