சனி, 19 டிசம்பர், 2009

ஒப்பாரி

கோசு பனி பேயும்
கோதாம்பு நெல் வெளையும்
குடுக்க எடம் இல்லண்ணு - இந்த
குழியிலயும் தள்ளுனாங்க - இந்த
குழிய உட்டு நீங்கி வர - எனக்கு
கோடி நாளு செல்லுதம்மா.

மாசி பனி பேயும்
மகிழம்பூ நெல் வெளையும்
மடிக்க எடம் இல்லாம- இந்த
மடுவுலயும் தள்ளுனாங்க - இந்த
மடுவ உட்டு நீங்கி வர - எனக்கொரு
மாமாங்கம் செல்லுதம்மா.

குறிப்பு: தனக்கு சரியான குடும்பத்தில் மணவாழ்க்கை அமையவில்லை என்கிற ஏக்கத்தை இந்த ஒப்பாரி வெளிப்படுத்துகிறது.

3 கருத்துகள்:

அகரம் அமுதா சொன்னது…

அழிகிய கருத்தமைந்த பாடல். ஒரு சில வட்டாரச் சொற்கள் புரியவில்லை. "கோசு, கோதாம்பு" போன்றவை. வழக்கொழிந்த வழக்கொழிந்த சொற்களுக்குச் சொற்பொருள் வழங்க வேண்டுகிறேன். தங்களின் இத்தகைய அரிய பணிக்கென் வாழ்த்துகள்.

meenamuthu சொன்னது…

குறிப்பு: தனக்கு சரியான குடும்பத்தில் மணவாழ்க்கை அமையவில்லை என்கிற ஏக்கத்தை இந்த ஒப்பாரி வெளிப்படுத்துகிறது.//

இறந்தவர்களுக்கு பாடுவதுதான் ஒப்பாரி என்கின்ற நினைவு!

என் வாசகாசாலைக்கு வந்து சென்றதற்கு நன்றி மிக.
அப்படியே என் அடுத்த வீடான தாலாட்டு வலைக்கும் வந்தீர்களா?

Edward Packiaraj சொன்னது…

அருமையான சேகரிப்பு தொடரட்டும் உங்கள் பணி
உங்கள் வழியில் எனது சேகரிப்புகள் https://vinganam.blogspot.com/p/smell-of-soil.html