புதன், 22 ஏப்ரல், 2015

நடவுப்பாடல்

More than a Blog Aggregator


நன்னே நன்னே நன்னே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னே நானே நன்னே
நானே நன்னானே நானே நன்னானே

ஆத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
ஆத்தத் தாண் டி போன மன்னன்
அழச்சா வருவாரோ.... நன்னே...

கொளத்துல கரைக்கும் புளி
கோது புளிதானோ கொட்ட புளிதானோ
கொளத்தத் தாண் டி போன மன்னன்
கூப்பிட்டா வருவாரோ.... நன்னே...

அந்திசாய அந்திசாய
அலரியழுதேனே அலரியழுதேனே
அழகான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பொழுது சாய பொழுது சாய
பொலம்பியழுதேனே பொலம்பியழுதேனே
பொன்னான  மடலு வாங்கி
போட்டனுப்புவேனோ நன்னே...

பாடியவர் : அம்புஜம் , மருங்கூர்
நாள்    : 6.1.2000

புதன், 15 ஏப்ரல், 2015

கும்மிப் பாடல்

More than a Blog Aggregator


காடுவெட்டி கல்பொறுக்கி
காக்கா சோளம் தினை வெரச்சி
மோடு வெட்டி முள்பொறுக்கி
முத்து சோளம் தின வெரச்சி

ஓராந்தான் திங்களிலே
ஓரெலையாந் தின பயிரு
ரெண்டாந்தான் திங்களிலே
ரெண்டெலையாந் தின பயிரு
............. .........................
..............   ......................
...................   ................
....................    ..................

பத்தாந்தான் திங்களிக்கு
பழுத்துவரும் தின பயிரு

.................  ..................
தேனும் தின மாவும்
தித்திக்குது வள்ளியாரே
தண்ணி தவிக்குதடி
தண்ணி கொஞ்சம் தாயேண்ணான்

பாடியவர்: திருமதி அம்புஜம், மருங்கூர்
நாள்: 24.10.1999

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆடு போவும் ஆடு போவும் வழிதனிலே

More than a Blog Aggregator


ஆடு போவும் ஆடு போவும் வழிதனிலே
அரசங்கொத்த அரசங்கொத்த வெட்டி வச்சேன்
வரடியோட வரடியோட அரசுன்னு
வந்த ஆடு வந்த ஆடு தீண்டுலத்த

மாடு போவும் மாடு போவும் வழிதனிலே
மாட்டு தொட்டி மாட்டுதொட்டி கட்டி வச்சேன்
மலடியோட மலடியோட தொட்டியின்னு
வந்த மாடு வந்த மாடு தீண்டுலத்த

நான் மொளவ நல்ல நிறுத்தி வச்சேன் கண்ணகி
நான் மொச பூச செய்துவச்சேன் இப்பவும்
அப்படியும் புள்ள இல்ல கண்ணகி- இந்த
அதிசய ராசா பாணியர்க்கு இப்பவும்

நான் கடுவ நல்ல நிறுத்திவச்சேன் கண்ணகி
நான் கன பூச செய்து வச்சேன் இப்பவும்
அப்படியும் புள்ள இல்ல கண்ணகி- இந்த
அதிசய ராசா பாணியர்க்கு இப்பவும்

குறிப்பு: குழந்தைப் பேறு இல்லாப்பெண்கள் தங்களின் சோகத்தை ஒப்பாரியாகப் பாடும் பாடல்.
பாடியவர்: திருமதி காவேரி , மருங்கூர்